ரஜினி குறித்த அறிவிப்பு…

புதிய அறிவிப்பு ஜுன் 17 காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 169 எனப் பெயரிடப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் வந்ததால், தலைவர் 169 பட இயக்குநர் மாற்றப்படுவார் என்ற தகவல் பரவியது. ஆனால் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நெல்சன் படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அந்த தகவலை பொய்யாக்கினார். மேலும் கடந்த சில நாட்களாக இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதவிருப்பதாக தகவல் ஒன்று பரவிவருகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது புதிய அறிவிப்பு (ஜுன் 17) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது தலைவர் 169 பட அறிவிப்பாக இருக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பு உண்மையாக இருக்குமா என்பது நாளை காலை தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்