
தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய்.
இவர்கள் இருவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த படத்திலும் வேலையிலும், விஜய் தனது மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்களின் ரசிகர்களிடேயே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த விஷயங்களை தவிர்த்து விடுங்கள் என்று ரஜினி மற்றும் விஜய்யும் பல முறை கூறியுள்ளனர்.
ஆனால் தற்போது ரஜினி வாங்கும் சம்பளத்தை விட விஜய் மாஸ்டர் படத்திற்கு வாங்கிய சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தளபதி விஜய் மிஞ்சி விட்டார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும் விஜய் சம்பளத்தை குறித்து பிகில் படத்திற்காக 50 கோடியும், தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்காக 80 கோடியும் தனக்கு சம்பளமாக வாங்கியுள்ளார் என்று வருமான வரித்துறையே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.