
மூத்த மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கனத்த இதயத்துடன் பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனுஷ் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும் வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த ரஜினியின் புகைப்படங்கள், பட பாடல் வீடியோக்கள், காட்சி வீடியோக்களை ஷேர் செய்து சூப்பர் ஸ்டார் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார் தனுஷ். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று தனுஷ் ட்வீட் செய்ததை பார்த்த ரஜினி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ரஜினிக்கு தனுஷ் வாழ்த்து தெரிவிக்க முக்கிய காரணம் இருக்கிறது. அவர் முதலில் ரஜனியின் தீவிர ரசிகன், அதன் பிறகே மருமகன். அதனால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து வாழும்போதும் கூட ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.