ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய விக்னேஷ் சிவன்!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ´ஜவான்´ படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.

இந்நிலையில் நயன்தாரா அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஸ்பெயினுடன் 2வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். தற்போது விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அதில் டாலடிக்கும் ரத்தினமே.. மினுமினுக்கும் முத்தாரமே.. என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் பரவலான கவனத்தை ஈர்த்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்