ரசிகனின் காலில் விழுந்த பிரபல நடிகன்!

பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகரொருவர் அவரது காலில் விழ ரித்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார்.
புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு கத சொல்லட்டா சார் என விஜய் சேதுபதி பேசும் வசனம் மிக பிரபலம். இந்தப் படத்தின் ஹிந்தி பதிப்பு உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கியுள்ளனர். இதில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடித்துள்ளனர்.


மேலும் ராதிகா ஆப்தே தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. டீசரை வைத்துப் பார்க்கும்போது அப்படியே தமிழ் படத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் உருவாகியுள்ளது தெரிகிறது. சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை கூட அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் திகதி திரைக்குவரவிருக்கிறது.
சனிக்கிழமை பிரபல ஹிந்தி நடிகர் ரித்திக் ரோஷன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ரசிகரொருவர் அவரது காலில் விழ ரித்திக் ரோஷனும் திரும்பி அந்த ரசிகரது காலில் விழுந்தார். அவர் அழகான மனிதர் மட்டுமல்ல நல்ல மனிதரென சமூக வலைதளங்களில் பரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


‘வார்’ இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் ஃபைட்டர் படத்திலும் ஹிருத்திக் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் முதன்முறையாக தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவரது கடைசி படமான ‘வார்’ சுமார் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன் பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்