யோகி பாபுவுக்கு திருமணம் உறுதியானது..! பெண் யார் தெரியுமா?

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடியன்களில் ஒருவர். அவருக்கு எப்போது திருமணம் என்று தான் பலரும் கேட்டு வந்தனர். எதாவது விருது விழாவுக்கு சென்றால் கூட அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் நடிகர் யோகி பாபு திருமணம் உறுதியாகியுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறுகிறது.

“பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதே குணத்துடன் பெண் கிடைத்துவிட்டார்” என பார்கவி பற்றி யோகி பாபு பேசியுள்ளார்.

முகநூலில் நாம்