
நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிசக்தி, கல்வி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் உள்ளிட்ட சிலருடன் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் சிலருடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச யோகா தின நிகழ்வொன்று சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.