யுவதி ஒருவர் விமா­னத்தை தகர்க்கப்போவ­தாக அச்­சு­றுத்தல் ; இங்­கி­லாந்து நோக்கி பயணித்த விமா­னத்தில் பரபரப்பு!

பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் வைத்து தனது ஆடை­களை களைந்­து­கொண்ட யுவதி ஒருவர், விமா­னியின் அறைக்குள் நுழைய முயன்ற சம்­பவம்  ஜெட்2 நிறு­வன விமா­னத்தில் இடம்பெற்றுள்­ளது. தான் ஒரு பயங்­க­ர­வாதி எனக் கூறிக்கொண்டார்.

சைப்­பி­ரஸின் லானேர்க்கா நக­ரி­லி­ருந்து இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் நகரை நோக்கி பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

தனது மேலா­டை­களை கழற்­றி­விட்டு உள்­ளா­டை­க­ளுடன் மாத்­திரம் காணப்­பட்ட இந்த யுவதி, சத்­த­மிட்­ட­வாறு விமா­னியின் அறைக்குள் நுழை­ய­வ­தற்கு அவர் முயற்சி செய்தார்.

விமா­னத்தில் வெடி­குண்­டுகள் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை வெடிக்­கப்­போ­வ­தா­கவும் கூறினார்.

தான் ஒரு பயங்­க­ர­வாதி எனவும் தனது பெற்றோர் ஐ.எஸ். இயக்­கத்தின் அங்­கத்­த­வர்கள் எனவும் அவர் கூறி­ய­தாக செய்திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

அவ்­வி­மா­னத்தில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த இளைஞர் ஒருவர், அந்த யுவ­தியை மடக்கிப் பிடித்தார்.

பிலிப் ஓ பிறையன்  எனும் 35 வய­தான நபர் ஒருவர் தனது மனைவி 3 பிள்­ளைகள் உட்­பட 6 பேர் கொண்ட குடும்பத்தினருடன் பயணம் செய்­து­கொண்­டி­ருந்தார்.

பதின்ம வயதில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரா­கவும் பணி­யாற்­றி­யவர் பிலிப்.

அந்த யுவ­தியை ஏன் ஒரு­வரும் மடக்கிப் பிடிக்­க­வில்லை என விமான ஊழி­யர்­க­ளிடம் அவர் கேட்டார்.

தம்மால் முடி­ய­வில்லi என ஊழி­யர்கள் பதி­ல­ளித்­தனர்.

அப்­போது  ‘என்னால் அது முடியும்’ எனக்­கூ­றி­விட்டு அந்த யுவ­தியை பிலிப் மடக்கிப் பிடித்தார்.

பின்னர் அவ்­வி­மானம் பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு திசை திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.  

அதையடுத்து குறித்த யுவதியை விமானத்திலிருந்து பொலிஸார் வெளியேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்