யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்.மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஆண்டின் 6 மாத காலப் பகுதியில் மட்டும் 224 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர சுகாதாரப் பிரிவின் புள்ளி விபரங்கள்இந்த தகவலை தெரிவிக்கின்றன.

டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு சுகாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவாய்ப்புள்ளதால் அவதானமாக செயற்படுமாறுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த புள்ளிவிபர தகவலின்படி

  • ஜனவரி மாதம் 184 பேரும்,
  • பெப்ரவரி மாதம் 20 பேரும்,
  • மார்ச் மாதம் 3 பேரும்,
  • ஏப்ரல் மாதம் ஒருவரும்,
  • மே மாதம் 10 பேரும்,
  • ஜூன் மாதம் 6 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்கம் உள்ள இடங்களில் விழிப்புணர்வு சுகாதார நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முகநூலில் நாம்