யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவருக்கு கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று, விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமிற்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, வைத்தியசாலையில் குறித்த நோயாளி அனுமதிக்கப்பட்டிருந்த விடுதியில் கடமையாற்றிய நான்கு பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி கூறினார்.

வைத்தியசாலையில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முகநூலில் நாம்