யாழ்.போதனா வைத்தியசாலையும் கொரோனாவுக்காக உள்வாங்கப்பட்டது

இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அத்துடன் இதற்கான நடவடிக்கைகளும் குறித்த வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முகநூலில் நாம்