யாழ் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவு!

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவடைகின்றன.   1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வன்முறைக் குழுவொன்றினால் தீயூட்டப்பட்டது.   யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட காலகட்டத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது.

அதன்போது அங்கிருந்த பல பாரம்பரிய நூல்கள் தீயினால் அழிவடைந்தன.   யாழ்ப்பாண நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.   முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் மக்களின் ஆதரவுடன் அது வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.  

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்ற நூல்கள், நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பழமையான பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன   எவ்வாறாயினும் தற்போது யாழ்ப்பாணம் நூலகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரம் புத்தகங்கள் காணப்படுவதாக அதன் நூலாளர் சுதந்தி சதாசிவ மூர்த்தி குறிப்பிட்டார்.  

முகநூலில் நாம்