யாழ்.பல்கலையில் இன்று நடைபெறவுள்ள பேரெழுச்சி – அலை அலையாய் அணிதிரள அழைப்பு

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளை நடத்தியிருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் தற்போது தமிழரின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தமிழரின் பாரம்பரியம் மிக்க கலைநயத்தை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள்.

இதன் ஒருகட்டமாக இந்த வருடம் இரண்டாவது வருடமாகவும் மொழிதனை கடையும் இளையவர் பயணம் என்ற தொனிப்பொருளில் “தமிழமுதம்” என்ற இயல்,இசை, நாடகம் என முத்தமிழை அரங்கேற்றவுள்ளனர்.

இந்த நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழக முன்றலில் பிரமாண்ட மேடையில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழரின் பாரம்பரிய கலைகளான நாட்டுக்கூத்து வில்லிசை,பறை , உட்பட பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தவுள்ளனர் மாணவர்கள்.

இந்தநிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ,பாடசாலை மாணவர்கள்,துறைசார்கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கு கொள்ளவுள்ளனர்.

எனவே தமிழரின் இந்த தொன்மைமிக்க இந்த பாரம்பரிய கலை நிகழ்வுகளை கண்டு தமிழ் அமுதத்தை அள்ளிப் பருக அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்.

முகநூலில் நாம்