யாழ்.பலாலியிலிருந்து சென்னைக்கு விமான சேவை இன்று ஆரம்பம்

யாழ்.பலாலி விமானத் தளத்தை இந்தியா சீரமைத்தது. இந்தியாவின் இந்த சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2019- இல் விமானவேவை ஆரம்பமானது.

மீண்டும் கொரோனா தொற்று நிலவிய வேளையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.

இலங்கையின் 3- ஆவது சர்வதேச விமான நிலையமாக பலாலி அமைந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் இன்று 12- ஆம் திகதி முதல் இந்த விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்