யாழ் – நீர்வேலியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்- நீர்வேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) எனும் இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், நீர்வேலி சந்திக்கு அருகிலுள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக இடம்பெற்ற வாகன விபத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் வேகா ரக மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிள், வேக கட்டுப்பாட்டை இழந்தமையால், வீதியோரமாக இருந்த சீமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது, இரும்புக்கம்பியொன்று அவரது நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை, நோயாளர் காவு வண்டி ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்