யாழ் நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம்

திருக்கார்த்திகைத் திருநாளில் 29-11-2020 காலை 10:00 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் ஆதீனத்தின் பெயர் ஒலிக்கப்படும்.
29-11-2020 ஞாயிற்றுக்கிழமை யாழ் நல்லை மண்ணில் சிவனருள் கொண்டு புதியதோர் ஆதீனம் உதயமாகின்றது. 
ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகும் இத்தருணத்தில் ஆன்ம வெளிக்கு அருமருந்தாய் தவத்திரு வேலன் சுவாமிகளின் ஆதீனம் அமைவது சாலப் பொருந்தும்.
கார்த்திகை மாதம் என்றாலே தமிழர்களின் மண்ணிலும் மனங்களிலும் தீப ஒளியாய் திக்கெட்டும் ஒளிரும் காலம். தமிழனுக்கு சக்தி மயமானதாகவும் பக்தி மயமானதாகவும் விளங்கும் கார்த்திகையில் கார்த்திகைப் பாலன் முருகனே உருவாகி வந்த நேரமதில் ஊரெல்லாம் ஒளி மிளிர, தமிழர் உலகெலாம் மனம் குளிர உதயமாகிறது புதியதோர் ஆதீனம்.  
அங்குரார்ப்பண நிகழ்வின் போது, 29-11-2020 காலை 10:00 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில், நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகளின் குருபீடமாக உதயமாகும் ஆதீனத்தின் பெயர் ஒலிக்கப்படும்.  
ஞானத்தைப் போதிக்கும் மடமாகவும், தமிழே அறிவாகவும் அரனே வடிவாகவும் உதயமாகவிருக்கும் ஆதீனமானது, அண்ணாமலையான் சோதி வடிவமாக  காட்சி தரும் நன்நாளில் எங்கள் நிலமெங்கும் ஆன்மீக ஒளித்திரளாய் அமைகிறது. 
நல்லோர் மனதில் நாளாந்தம் எழுந்த கேள்விகளுக்கு கார்த்திகைப் பாலன் திருநாளில் விடை தருகின்றார் நல்லூர் தவத்திரு வேலன் சுவாமிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்