யாழ் சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கு 300 மில்லியன் ரூபாய் நிதியை இந்திய அரசு வழங்குகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசுடன் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் சுற்றுலா, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கு முன்னர், இந்தியாவுடன் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்குத் திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது , கொரோனா வைரஸால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, அது தாமதமானது.

இப்போது நாடு வழமைக்குத் திரும்பியுள்ளதால், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கல் பணிகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி விமானநிலைய நீர் வழங்கல், கழிவு நீர் அமைப்பு, கழிவுகளை அகற்றும் முறை, பயணிகள் புறப்படும் செக்-இன், செக்-அவுட் மற்றும் பயணிகளின் பிரிவு உள்ளிட்ட பல வசதிகளை இந்த நிதி ஊடாக மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

முகநூலில் நாம்