யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் சோதனை

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தடஅனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல்முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார்போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார்.நேற்றைய தினம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற விசேடகலந்துரையாடலின் போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு-யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தினதும் வழித்தடஅனுமதி பத்திரங்கள்,சாரதி அனுமதிபத்திரம் முகமாலையில் பரிசோதிக்கப்படுவதுஎனவும் அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்துகொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்திமீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் கைதடியில் உள்ளூராட்சி அமைச்சில் உள்ளூராட்சி அமைச்சின்செயலாளர் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படிதீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாணகொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள்தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதிஅனுமதிப்பத்திரம் என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும்அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிசார் மற்றும் வடக்கு மாகாண வீதிபயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பேருந்துவவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர்உயிரிழந்தவை குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்