யாழ். காரைநகர் வைத்தியசாலைக்கு ஸ்கானர் இயந்திரம் அன்பளிப்பு!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு ஸ்கானர் இயந்திரம் (Ultrasound Scanner) ஒன்றை எஸ்.கே.நாதன் என்பவர் அன்பளிப்புச் செய்துள்ளார்.

வடக்கில் பல உதவிகளை செய்து வரும் இவர், மருத்துவமனையில் பற்றாக்குறையாக காணப்பட்ட குறித்த இயந்திரத்தை பல மில்லியன் ரூபா செலவில் அன்பளிப்புச் செய்துள்ளார்.

பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி நிமலினி தலைமையில் இயந்திரம் கையளிப்பு நகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன், யாழ் போதானா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவன் உட்பட பல வைத்தியர்களும், சமூக ஆர்வலர்களும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்