
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியை சேர்ந்த ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த நபரிடமிருந்து 18 துவிச்சக்கரவண்டிகள் முழுமையாகவும் உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்நபர் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி அவற்றின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.