யாழ்ப்பாண வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்திக்குருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக பஸ் ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் ஒன்று மோதி இன்று (23) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் பயணித்த 50 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பற்றிமா வீதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்