யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் மாபெரும் கண்காட்சி கிளிநொச்சியில்

 

 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த மாபெரும் கண்காட்சி

குறித்த கண்காட்சி இரண்டு நாட்க்களாக கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி நிகழ்வை காண்பதற்காக வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் இந்த  கண்காட்சி நிகழ்வு நேற்றும் இன்றும் 8 மணி முதல் தொடங்கி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளதுடன் இந்த கண்காட்சியில் குறைந்த செலவிலான மனைகள் அமைத்தல், நீர் முகாமைத்துவத்தினை பேணல், நவீன நகர திட்டம், நவீன போக்குவரத்து முறைமைகள், ரோபோக்கள், நவீன கட்டுமான துறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் குறித்த கண்காட்சியில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

முகநூலில் நாம்