யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட கட்டடம் திறந்து வைப்பு

கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்
தொழில்நுட்ப பீடத்தின் கட்டடம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார்  525 மில்லியன்
ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதி
கடற்றொழில் அமைச்சு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து
கொண்டு   திறந்து வைத்தார். ஏற்கனவே கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில்
பொறியியல் பீடம்  மற்றும் விவசாய பீடங்கள் என்பன இயற்கி வருகின்றன.

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா
தலைமையில் இடம்பெறவுள்ள இன் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.
என். ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்
ரூபவதி கேதீஸ்வரன், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள்,
மாணவர்கள் என பலரும்  கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்