
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் தந்தையும் மகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். யாழ்.பிறவுண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துள்ளனர். இதன்போது, வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்குக் காரணமாக தீப்பற்றியுள்ளது. இந்நிலையில் வீதியில் பயணித்தவர்களின் முயற்சியால் தீ அணைக்கப்பட்டு தந்தையும் மகளும் எந்தவித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.