யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அனர்த்தம்

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத்தொழிற்சாலை தீ பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் நாசமாகியுள்ளன.

தும்புத்தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது காட்டிற்கு வைக்கப்பட்ட தீ தும்புத்தொழிற்சாலையின் வெளியில் அடுக்கப்பட்டுள்ள பொச்சுக்கள் மீது பரவியுள்ளது.

தீ விபத்தினை இராணுவத்தினர் ,தென்மராட்சி தீ அணைப்பு படையினர் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

முகநூலில் நாம்