
யாழ். பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் ரக வாகனம், வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.