யாழில் சர்வதேச வர்த்தக சந்தை திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை இன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வர்த்தக சந்தையினை, நாடாவெட்டி திறந்து வைத்துள்ளார். இதேவேளை யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக இந்த வருடம் இடம்பெறுகின்றது.

யாழ். மாநகர சபை, சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, மற்றும் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகம் ஆகியன இதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.

முகநூலில் நாம்