யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன,

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் ஒரு தனியார் கட்டட மற்றும் நீர்குழாய் பொருத்தும் நிறுனம் ஒன்றின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தேவாலய கட்டட ஒப்பந்தம் தொடர்பு காரணமாகவே சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகரை கட்டட வேலையின் காரணமாக சந்திப்பதற்கு நேரிட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இவர் இவ்வாறு யாழ்ப்பாணத்தின் உள்ள பல்லேறு அரச திணைக்களங்களிலிலும் ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து கொண்டிருப்பது ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளன.

அத்துடன் மிக அண்மைக் காலங்களிலும் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண சுகாதாரத் திணைக்களத்திலும் பல ஒப்பந்த மற்றும் சிறு திருத்த வேலைகளை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மாகாண சுகாதாரத் துறையினரின் நடவடிக்கையில், நம்பிக்கையில் எந்தப் பயமும் இன்றி நடமாடிய யாழ். மக்களுக்கு மாகாண சுகாதாரத் துறையினர் இத்தகவல்களை மறைத்தமையினால் மக்கள் மத்தியில் பெரும் கவலையும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையினையும் கண்டு மக்கள் சுகாதாரத் துறையினர் மேல் அவநம்பிக்கையினைக் கொண்டுள்ளனர்.

எனவே ஏனைய மக்களுக்கான அறிவுரைக்கேற்ப சம்மந்தப்பட்ட அரச திணைக்களங்களுக்கு பாதிக்கப்பட்ட நபரினால் ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டிருந்தால் தாமாக முன் வந்து தங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்வதுடன் அரச திணைக்களங்களும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

 

முகநூலில் நாம்