யாழில் கரப்பான் பூச்சி பிரியாணி! மக்களே உஷார்

யாழில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் மதிய போசனத்திற்காக பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்ற ஒருவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் முழு கரப்பான் பூச்சி பொரித்த நிலையில் கிடந்ததை அடுத்து அவர் ஹோட்டல் உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழில் தொடர்ச்சியாக இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதால் உணவகங்களில் உணவு உட்கொள்பவர்கள் சற்று அவதானமாக இருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்