யாழில் ஒரே மாதத்தில் நடந்த அதிசயம்…ஓரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற இரண்டாவது தாய்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த 2வது சம்பவம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது. யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 30 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு ஒரு பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு சத்திர சிகிச்சை மூலம் மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி சுரேஸ்குமார் குழந்தைகளையும், தாயையும் நலமாக மீட்டார். இந்நிலையில் தாயும் சேய்களும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2ம் திகதியும் யாழ்.கட்டுவன் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்