
யாழ்பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த காணியில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்
மனித எச்சங்களுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

