யாழில் இரவுவேளை அட்டகாசம் செய்த மர்ம கும்பல்! பஸ் தீ வைத்து எரிப்பு

யாழ் தென்மராட்சி, மாசேரி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பம் ஒன்று சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

15 பேர் கொண்ட கும்பலால் நேற்று இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

தனியார் போக்குவரவு பேருந்து ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்