யாழில் ஆலய உண்டியலை ஆட்டையைப்போட்ட ஜோடி!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு துவிச்சக்கர வண்டியில் வந்த ஜோடியால் பணம் திருடப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள இலங்கைநாயகி ஆலயத்திலேயே இத்திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த ஜோடி மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை அருகில் இருந்த CCTV காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரும் குறித்த ஆலயத்தில் பெறுமதியான கோயிலின் பித்தளை பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

முகநூலில் நாம்