யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை முடிவு

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை (19) மெய்நிகர் சந்திப்பை நடத்தவுள்ளது என காங்கிரஸின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதவிவொன்றை இட்டுள்ள அவர், பொதுச் செயலாளர் என்ற வகையில், மலையகத்தைச் சேர்ந்த தொழில் வல்லுனர்களும் தங்களின் பாரபட்சமற்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்குமாறு செயற்குழுவிடம் கோருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்பது தொடர்பில் நாளை (19) மாலையே அறிவிப்போம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்