யானை தாக்கியதில் பெண் ஒருவர் உட்பட மூவர் பலி…!

நாட்டில் பல பாகங்களிலும் யானை தாக்குதலுக்குள்ளாகி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொனராகலை-ஓக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தள்ளார் என கூறப்பட்டுள்ளது.
 
குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தோட்டத்தில் தொழில் புறிந்து கொண்டு இருக்கும் வேளையிலேயே இவ்வாறு யானை தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர் 60 வயதான பெண் ஒரவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குறித்த பெண்ணின் கணவரும் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் 62 வயதான ஓக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஓக்கம்பிட்டிய-பலுகெலே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வயல் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்