
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யப்பானைச் சென்றடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி நாட்டிலிருந்து சென்றுள்ளார். அவர் டோக்யோ நகரை சென்றடைந்துள்ளார்.
அவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது