மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் மற்றுமொருவர் படுகாயம்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், அல்லைநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த நபர் தோப்பூர் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை முந்திச் சென்ற வேளை மோட்டார் சைக்கிள் பாதையைவிட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வருகிறது.

முகநூலில் நாம்