மொரட்டுவையிலிருந்து மருதானை பயணித்த புகையிரதத்தில் தீ விபத்து!

மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த புகையிரதம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவையிலிருந்து இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்ட 325 புகையிரதத்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டடுள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிட்டிய புகையிரத நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதன்போது, கடலோரப் பாதையின் புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்கள உயர் அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்