
கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டவர்களில் வசந்த முதலிகே, லஹிரு வீரசேகர, ரதிந்து சேனாரத்ன மற்றும் தம்மிக்க முனசிங்க ஆகியோரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.