மே 18 முள்ளிவாய்க்கால் தினம் முன்னிட்டு ஊர்திகள் கிளிநொச்சிக்கு வருகை

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகன ஊர்தி இன்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து. பரந்தன் ஊடாக முல்லைத்தீவு நோக்கி செல்கிறது.
இன்று காலை 7.30 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலைத்தொடர்ந்து மக்கள் ஊர்தியில் உள்ள நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து பயணத்தை ஆரம்பித்த வாகன ஊர்தி கிளிநொச்சி பொதுச்சந்தை, மற்றும் பரந்தன் சந்திகளில் மக்களின் அஞ்சலிக்காக தரித்து நின்று முல்லைத்தீவு நோக்கி பயணிக்கிறது.

இதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஊர்தி  நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட  இன்று கிளிநொச்சி பரந்தன் வந்தடைந்து பரந்தனில் இருந்து இன்று பூநகரி ஊடக வெள்ளாங்குளம், மல்லாவி, மாங்குளம் வந்தடைந்து பொத்துவில் இருந்து  முள்ளிவாய்க்கால் வரையான வாகன ஊர்தியும் இணைந்து மாங்குளத்தில் இருந்து இரண்டு வாகன ஊர்திகளும்  ஏ9 வீதியூடாக கிளிநொச்சியை வந்தடைந்து கிளிநொச்சியிலிருந்து பராந்தனுடாக முல்லைவாய்க்கால் சென்றடையவுள்ளது 
இதேபோன்று இன்று பரந்தன் முல்லை வீதியில் சமுத்துவ கட்சியினர்  முள்ளிவாய்க்கால் நினைவுகளை எடுத்தோம்பும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்