மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ள வெட்டுகிளி..

குருநாகல் மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், அந்த பகுதியில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகளில் பரவியுள்ளதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் நேற்றைய தினம் இந்த வகையிலான வெட்டுகிளிகள் முதன் முறையாக இனம் காணப்பட்டது.

இந்த நிலையில், அந்த வெட்டுகிளிகள் தொடர்பில் அராய்வதற்கு விவசாய பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் அந்த பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.

அந்த வெட்டு கிளிகள் தொடர்பான விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

மரவெள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த நிலையில், அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது குறுநாகல் மாவட்டத்தின் விவசாய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

முகநூலில் நாம்