மொரீஷியஸில் விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளது (படங்கள் இணைப்பு)

மொரீஷியஸ் கடற்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி, ஆயிரம் டொன் எரிபொருளை கடலில் கசியவிட்ட, ஜப்பானிய கப்பல் இரண்டாக பிளவடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதனால் நூற்றுக் கணக்கான டொன் எரிபொருட்கள் கடலில் முன்னதாகவே கலந்துவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், சனிக்கிழமை கப்பல் இரண்டாக பிளவடைந்து விட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


அது மாத்திரமன்றி ஞாயிற்றுக்கிழமை, உத்தியோகபூர்வ தூய்மைப்படுத்தலால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் எம்.வி.வகாஷியோவை இரண்டு துண்டுகளாகக் பிளவடைந்துள்ளதை வெளிக்காட்டியுள்ளது.
மொரிஷியஸ் கடந்த வாரம் ஒரு சுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவித்தது, மீதமுள்ள 3,000 டொன் எண்ணெயை கப்பலில் இருந்து வெளியேற்றுவதற்காக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். 


இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மொரீஷியஸ் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளின் தாயகமாகவும், சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்