
இலங்கையின் யுபுன் அபேகோன், ஒஸ்ட்ராவா உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஐந்தாமிடத்தைப் பிடித்தார்.
உலக சம்பியனும் நட்சத்திர வீரருமான ஜமைக்காவின் யொஹான் பிளேக் உள்ளிட்ட பிரபல வீரர்களும் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
100 மீட்டர் தூரத்தை 10.08 செக்கன்களில் கடந்த யுபுன் அபேகோன் ஐந்தாமிடத்தை பிடித்தார்.
9.93 செக்கன்களில் தூரத்தை கடந்த பிரித்தானியாவின் ரீஸ் பிரஸ்கோர்ட் முதலிடத்தைப் பிடித்தார்.
யொஹான் பிளேக் இரண்டாமிடத்தை அடைந்தார்.
இவ்வருடத்துக்கான ஒரேகன் உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டி செக் குடியரசில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.