மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

விபத்து மற்றும் அனர்தங்களுக்குள்ளாகி  மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல்
உறுப்புகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கைச்சாத்திடப்பட்டது.

விபத்துகள் மற்றும் அனர்தங்களுக்குள்ளாகி அதன்  காரணமாக மூளைச்சாவு
அடைந்தவர்களின் உறுப்புகளை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கான விமானப்
போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்துடன் இலங்கை விமானப்படை தளபதி
எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.
ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா ஆகியோர் கடந்த 2022 டிசம்பர் 21 ஆம் திகதி
விமானப்படை தலைமையகத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் .

இதனடிப்படையில்  இங்கு முக்கியாக திடீர் விபத்துகள் மற்றும்
அனர்தங்களுக்குள்ளாகி அதன் காரணமாக மூளைச்சாவு அடைந்தவர்களின்
பாதுகாவலர்களின் வேண்டுகோளின் பிரகாரம்   அவர்களின் முக்கிய
உடலுறுப்புக்களை பெறுவதற்காக விமானம் மூலம் பாதுகாப்பாக
கொண்டுசெல்லப்படுவர்.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க கைச்சாத்திடப்பட்ட இந்த
ஒப்பந்தத்தின்படி, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  சி-130, அண்டனோ -32,
எம்ஏ-60,  வை -12, எம்ஐ-17, பெல்-412, பெல்-212 மற்றும் பெல்-206 ஆகிய
விமானங்கள் இந்த நோயாளிகள்  மற்றும் அவர்களின் உறுப்புகள் கொண்டு
செல்லப்பட பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்