மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யவும்! அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு

நாட்டில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 3 மாதத்திற்குள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரிக்கு அமைச்சர் வழங்கிய ஆலோசனையில்,

“தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 20 ஆயிரம் சுற்றுலா ஹோட்டல்கள் காணப்பட்டாலும் அவற்றுள் இரண்டாயிரம் ஹோட்டல்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் நாட்டில் உள்ள சகல சுற்றுலா ஹோட்டல்களையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 3 மாதத்திற்குள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்தலின் மூலம் ஹோட்டல்களின் தரத்தை அதிகரிக்க முடியும். நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்” என்றார்.

முகநூலில் நாம்