மூன்றாவது தடுப்பூசியான பைசரை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள வேண்டும் – தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியான
60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதி காலாவதியாகவுள்ள
நிலையில் மக்கள் தாமதிக்காது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு
தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் சமித்த கினிகே வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

நாட்டில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனை
அல்லது மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு சென்று உரிய தடுப்பூசியை
பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை 8 மில்லியன் பேர் மட்டுமே மூன்றாவது டோஸ் பெற்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மூன்றாவது மூன்றாவது தடுப்பூசியை மக்கள் தாமதிக்காது பெற்றுக்கொள்ள
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்