முல்லைத்தீவில் வரட்சி: ‘2,416 குடும்பங்கள் பாதிப்பு’

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, 2,416 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வெலிஓயா பிரதேசத்தில், 430 குடும்பங்களைச் சேர்ந்த 1,540 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், 1,986 குடும்பங்களைச் சேர்ந்த 6,398 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவித்தார்.

ஏப்பரலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேசங்களில், மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தால், அப்பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படவில்லையென்றும், விமலநாதன் கூறினார்

முகநூலில் நாம்