முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் : கணக்காய்வாளர் நாயகம் ஊடாக சிறப்பு விசாரணை ஆரம்பம்

முன்னாள் ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார
முகாமைத்துவம் தொடர்பில்  சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
கணக்காய்வாளர் நாயகம் டப்ளியூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.

பிரதி கணக்காய்வாளர் ஒருவரின் கீழ் கணக்காய்வாளர்கள் குழாம் ஒன்று
இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2022 ஜூலை 4 ஆம் திகதியிடப்பட்டதாக ‘ இலங்கையின்  நிதி முகாமைத்துவம்
மற்றும் பொதுக் கடன் கட்டுப்பாடு தொடர்பிலான சிறப்பு கணக்காய்வு அறிக்கை
2018 – 2022 ‘ எனும் தலைப்பின் கீழ் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்
நீதிமன்றம் கணக்காய்வாளர் நாயத்துக்கு கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டது.

  அமரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக பேண நாணயச்
சபை எடுத்த தீர்மானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும்.

. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள ஏற்பட்ட கால தாமதம்
மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள்

 கடந்த 2022  ஜனவரி 18 ஆம் திகதி முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட சர்வதேச
பிணை முறி பத்திரங்கள் தொடர்பில்  500 மில்லியன் அமரிக்க டொலர்களை
செலுத்தியமை மற்றும் அது சார்ந்த விடயங்கள்

 மேற்சொன்ன நடவடிக்கைகள் மற்றும் செலுத்துகைகளால் மத்திய வங்கிக்கு
ஏற்பட்ட இழப்பு தொடர்பிலான கணக்காய்வு  அறிக்கை

ஆகியவற்றை மையபப்டுத்தி அந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் 30 ஆம்
திகதிக்கு முன்னர் அவசியம் என  உயர் நீதிமன்ரம் உத்தரவிட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்