முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பதினொரு பேர் படுகாயம்!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பதினொரு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது காயங்களுக்குள்ளான நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும், தனியார் பேருந்தொன்றும் முரசுமோட்டைப் பகுதியில் வைத்து மோதுண்டமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முகநூலில் நாம்