மும்பை அணியின் அபாயகரமான வீரர் ரோஹித் ஷர்மா  

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்னும் 2 நாட்களில் ஆரம்பமாகவுள்ள 13 ஆவது ஐ.பி.எல். தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பிரதம பயிற்றுநரான ரிக்கி பொண்டிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகரமான வீரர் யார் என்பதை விவரித்துள்ளார்.  

இதுகுறித்து பொண்டிங் கூறுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவை விட அபாயகரமான வீரராக வேறு யாரும் இருக்க முடியாது என்றார். ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இருக்கும் ரோஹித் ஷர்மா, ஐந்து முறை சம்பியன் கிண்ணத்தை முத்தமிட்டுள்ளார்.  

2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும்போது அந்த அணி கிண்ணத்தை வென்றது. அதன்பின் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிண்ணததை வென்று கொடுத்துள்ளார். இதுவரை 188 போட்டிகளில் 4898  ஓட்டங்கள் அடித்துள்ளார். 
2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்றபோது, மும்பை இந்தியன்ஸ் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்